Posts

குட்டி யானை

 இரை தேடி வந்தனை, குளிர் நீராட நின்றனை, கருவின் பசி தீர்க்க பல மயில்கள் கடந்தனை, பழந்தனை தந்தீரோ,இலை என் பிள்ளை உயிர் தனை பரித்தீரோ, எத்துனை இனம் கண்டேன் உம் போல் எவரும் உயர்ந்தவர் இலை, உயிரினமடா நீயும் நானும், வாயிலை எனக்கு அதுதான் பிழையோ! வாய் மொழி திறந்தால் சொல்வேன், என் சிசுவின் மரண வலியை! நம்பிக்கை கொண்டே வாழ்ந்தோம் உயிர்களின் உறவே அவைதானே! இனி எவரை நாடுவோம் பசியில் தான் வாடுவோம்! தகுதி அற்றாய் நீ உயிரினம் என்று உனை அழைக்காதே, பொருளினம் என்று சொல்லிக்கொள்! வெடி மருந்தொன்று செய்தாயே பண்டிகையை நாடவா இலை என் இனத்தினை சாய்க்கவா? உணவில் கலப்படம் செய்தாய் எனையும் கொல்ல அதையே தந்தாய்! பச்சிளம் பிள்ளை ஒன்று சுமந்தேனடா உனை பெற்ற தாயின் வலி நீ அறியாயோ? பழிதீர்க்க சட்ட மேடை உனக்கொரு வழியுண்டு நான் ஏற நீதிமன்றம் எதுவும் இலையிங்கு! மனவலி திறந்தேனோ, உனை மனிதன் என சொல்வது முறைதானோ?